தொடர்புடைய செய்திகள்
- குளுகுளு கவர்ச்சி... கோவாவில் நீச்சல் உடையில் ஜாலி பண்ண சமந்தா!
- குலுங்க குலுங்க கூத்தாடிய நடிகை ஷாலு ஷம்மு - கிளாமர் வீடியோ!
- ஓட்டை போட்ட ஜாக்கெட்டில் உள்ளே இருக்கும் அனைத்தையும் காட்டிய அஞ்சலி!
- கவர்ச்சி உடை அணிந்தும் பத்தலன்னு கிழிச்சு விட்டுடீங்களா? கிறுகிறுக்க வைத்த பூனம் பாஜ்பா!
- கணவரை கண்டதும் ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்கும் தாமரை - இது கிராமத்து ரொமனாஸ் மாமே!
ஓடிடி தளத்தில் வெளியான டாப் 10 தமிழ் படங்கள் 2021!
10. பேச்சிலர்:
ஜிவி பிரகாஷ் குமார், திவ்யா பாரதி நடிப்பில் டிசம்பர் 3ம் தேதி வெளியான திரைப்படம் பேச்சிலர். சதிஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவான இப்படம் அடல்ட் காதல் திரைப்படம் என்ற பிம்பத்தை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கியது.
9. ஓ மணப்பெண்ணே:
தீபக் சுந்தர்ராஜன் எழுதி, கார்த்திக் சுந்தர் இயக்கி அக்டோபர் 22ல் வெளியான திரைப்படம் ஓ மணப்பெண்ணே. காதல் நகைச்சுவைத் திரைப்படமான இதில் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர்.
8. மண்டேலா:
இந்திய தமிழ் அரசியல் நையாண்டி தொலைக்காட்சித் திரைப்படமான மண்டேலா ஏப்ரல் 4 தேதி வெளியானது. அறிமுக இயக்குநரான மடோன் அஸ்வின் எழுதி, இயக்கிய இப்படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்திருந்தார்.
7. சுல்தான்:
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ஏப்ரல் 2ம் தேதி வெளியான திரைப்படம் சுல்தான். இப்படத்தில் கார்த்திக், ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் நடித்திருந்தனர். அதிரடித் திரைப்படமான இதன் பாடல்கள் குழந்தைகள் முதல் பெயவர்கள் வரை அனைவரையும் ஈர்த்தது.
6. மாநாடு:
வெங்கட் பிரபு எழுதி இயக்கி, சுரேஷ் காமாட்சி தயாரித்த மாநாடு திரைப்படம் சிம்புவின் கெரியருக்கு மிகச்சிறந்த திரைப்படமாக அமைந்தது. இப்படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். இப்படம் இந்த வருடம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
5. டாக்டர்:
சிவாகார்த்திகேயன் நடித்து அக்டோர் 9ம் தேதி வெளியான திரைப்படம் டாக்டர். காமெடி திரைப்படமான இது பெரும்பலமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . இந்த படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.
4. கர்ணன்:
மாரி செல்வராஜ் எழுதி ஏப்ரல் 9ம் தேதி வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்தில் தனுஷ், யோகி பாபு, லால், நடராஜன் சுப்பிரமணியம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் கதையானது 1995 கொடியன்குளம் சாதிக் கலவரத்தை அடிப்படையாக கொண்டது.
3. சார்பட்டா:
இந்திய தமிழ் வரலாற்று, விளையாட்டு அதிரடித் திரைப்படமான சர்பட்டா பரம்பரை ஜூலை 22ல் வெளியானது. ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.நிறைய கதாபாத்திரங்கள் கொண்டு காருக்கு அழுத்தம் கொடுத்து வெளியான இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது.
2. மாஸ்டர்:
தளபதி விஜய் நடிப்பில் ஜனவரி 13ல் வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார்கள். மாஸ் ஹீரோ திரைப்படம் என்பதால் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
1. ஜெய் பீம்:
இருளர் இன மக்களின் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் திரைப்படமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. ஜெய்பீம். இத்திரைப்படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோள் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் இந்திய சினிமாவின் மிகச்சிறந்த திரைப்படம் என்ற இடத்தை பிடித்துள்ளது.
