1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (19:37 IST)

பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு

ஒமிகிரான் வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்திருந்தார் என்பது பார்த்தோம் 
 
இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது 
 
60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோய் உடையவர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதன்படி  2 தவணை இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் அல்லது முப்பத்தொன்பது வாரங்கள் நிறைவடைந்தவர்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் முதல் இரண்டு தவணை தடுப்பூசி கோவாக்சின் எனில் அதையே பூஸ்டர் தடுப்பூசி ஆக செலுத்த வேண்டுமென்றும் கோவிஷீல்டு என்றால் அதையே பூஸ்டர் தடுப்பூசி ஆக செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது