திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (12:37 IST)

எலான் மஸ்க்கிட்ட ஜாக்கிரதையா இருங்க! சொமாட்டோவை எச்சரித்த நெட்டிசன்கள்!

Elon Musk
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளது குறித்து சொமாட்டோ நிறுவனம் போட்டுள்ள ட்வீட் வைரலாகியுள்ளது.

பிரபலமான ஹாலிவுட் படமான பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் படத்தில் ஒரு காட்சி வரும். சூப்பர்மேனின் வீட்டை வங்கி கடனுக்காக ஜப்தி செய்ய இருக்கும்போது பேட்மேன் அதை தடுத்து நிறுத்துவார். எப்படி இதை செய்தாய் என கேட்கும்போது அந்த பேங்கையே வாங்கிட்டேன் என பேட்மேன் அசால்ட்டாக சொல்வார்.

அதுபோலதான் தற்போது அசால்ட்டாக மிகப்பெரும் சமூக வலைதளமான ட்விட்டரை போகிற போக்கில் வாங்கி போட்டுள்ளார் தொழிலதிபர் எலான் மஸ்க். எலான் மஸ்க்கின் இந்த செயல் தற்போது உலக அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.
elan musk

இந்நிலையில் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியுள்ளது குறித்து ட்விட்டரிலேயே பதிவிட்டுள்ள சொமாட்டோ “நான் ஒரு பீட்சா வாங்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கும் வினாடிக்குள் எலான் மஸ்க் ட்விட்டரையே வாங்கிவிட்டார்” என பதிவிட்டுள்ளது.

அதற்கு கமெண்ட் இட்டுள்ள சிலர் அவர் உங்கள் நிறுவனத்தையுமே வாங்கி விடுவார் உஷாராக இருங்கள் என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர்.