1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (10:24 IST)

எலான் மஸ்க் வசமாகும் ட்விட்டர்? டொனால்ட் டிரம்ப் சொல்வது என்ன?

எலோன் மஸ்க் டிவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை வாங்கினாலும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் ட்விட்டருக்குத் திரும்ப மாட்டார் என தெரியவந்துள்ளது.

 
உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் முக்கியமான இடத்தில் இருப்பது ட்விட்டர். சமீப காலமாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்க பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் முயன்று வருவதாக தகவல்கள் வெளியானது.
 
முன்னதாக ட்விட்டரிக் எலான் மஸ்க் 9.2 சதவீதம் பங்குகளை வாங்கியிருந்த நிலையில் அவரை ட்விட்டர் நிர்வாக குழுவில் இணைய ட்விட்டர் அழைப்பு விடுத்தது. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை தான் முழுமையாக வாங்கி கொள்ள விரும்புவதாக கூறிய எலான் மஸ்க் பங்கு ஒன்றிற்கு 54.2 அமெரிக்கா டாலர் என டீல் பேசியுள்ளார்.
 
இந்த பேரத்திற்கு ட்விட்டர் நிர்வாக குழு ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதனால் 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் ட்விட்டரை வாங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
டிவிட்டருக்கு வர மறுக்கும் டிரம்ப்: 
எலோன் மஸ்க் டிவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை வாங்கினாலும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் ட்விட்டருக்குத் திரும்ப மாட்டார் என தெரியவந்துள்ளது. அதற்குப் பதிலாக தனது சொந்த ட்ரூத் சோஷியல் மீடியா ப்லாட்ஃபாமை பயன்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து டிரம்பு தெரிவித்துள்ளதாவது, நான் டிவிட்டரில் இணைய விரும்பவில்லை.ட்ரூத் சோஷியல் மீடியாவிலேயே இருக்க போகிறேன். எலோன் ட்விட்டரை வாங்குவார் என்று நான் நம்புகிறேன், ஏனெனில் அவர் அதை மேம்படுத்துவார். எலான் மஸ்க் ஒரு நல்ல மனிதர் என தெரிவித்துள்ளார்.