தொடர்புடைய செய்திகள்
- யுக்ரேன் பதற்றம்: ஐரோப்பாவிற்கு கூடுதல் படைகளை அனுப்பும் அமெரிக்கா
- அமெரிக்காவில் எமர்ஜென்ஸி: வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தல்
- அமெரிக்காவை உலுக்கும் பனிப்புயல்! – அவசர நிலை பிரகடனம்!
- ஆப்ரிக்க நாடுகளை தாக்கிய அனா புயல் - 70க்கும் மேற்பட்டோர் பலி
- தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
ஐரோப்பாவை தாக்கிய யூனிஸ் புயல்! – 8 பேர் பலி!
ஐரோப்பாவை யூனிஸ் புயல் தாக்கியதால் இங்கிலாந்து முழுவதும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் யூனிஸ் புயல் தாக்குதலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 32 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான புயலாக யூனிஸ் கருதப்படுகிறது. இங்கிலாந்தின் வைட் தீவில் 122 மைல் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
யூனிஸ் புயலால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சார சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளது,. பேருந்து, ரயில், விமான வசதிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. யுனிஸ் புயலின் தாக்கம் நெதர்லாந்து, பிரான்சு, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த புயலால் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
