1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (12:25 IST)

ஆப்ரிக்க நாடுகளை தாக்கிய அனா புயல் - 70க்கும் மேற்பட்டோர் பலி

தெற்கு ஆப்ரிக்க நாடுகளை அனா எனும் வெப்ப மண்டலப் புயல் தாக்கியதால் உண்டான மழை வெள்ளத்தால் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


தீவு நாடான மடகாஸ்கரில் குறைந்தது 48 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1,30,000 பேர் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறி தற்காலிக இருப்பிடங்களில் வசித்து வருகின்றனர்.

மலாவி நாட்டில் 11 பேர் இறந்துள்ளனர். இங்கு பல இடங்கள் பேரழிவு நிகழ்ந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மலாவியில் நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

மொசாம்பிக்கில் 18 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 20,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இங்கு அனா புயலால் 10,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.