ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 ஜனவரி 2022 (10:32 IST)

அமெரிக்காவை உலுக்கும் பனிப்புயல்! – அவசர நிலை பிரகடனம்!

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை நகரங்களில் வீசிவரும் கடும் பனிப்புயல் காரணமாக அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கிழக்கு கடற்கரைகளை ஒட்டிய மாகாணங்களில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலைகளில் ஒரு அடி உயரத்திற்கும் அதிகமாக பனி மூடியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

லாங் ஐலேண்ட் பகுதியில் பெண் ஒருவர் காருக்குள் குளிரில் விறைத்து இறந்த நிலையில் கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பனிப்பொழிவு அதிகம் உள்ள மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.