1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. World corona count increases as 2.38 crores

ஒருநாள் கொரோனா பாதிப்பு: இந்தியா தொடர்ந்து முதலிடம்

உலகம்
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தாலும் ஒருநாள் கொரோனா பாதிப்பில் கடந்த சில நாட்களாக இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதேரீதியில் சென்றால் இந்தியா உலக கொரோனா பாதிப்பில் முதலிடத்தை பிடிக்கும் அபாயமும் உள்ளதாக கருதப்படுகிறது.
 
உலக அளவில் 2.38 கோடி பேருக்கு கொரோனா பரவியுள்ளதாகவும், உலக அளவில் கொரோனோ பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.63 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களில்  61,767 பேர் அபாய கட்டத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்
 
அமெரிக்காவில் மட்டும் கொரோனாவிற்கு 59 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், அந்நாட்டில் கொரோனாவால் 1.81 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,448 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவை அடுத்து பிரேசில் நாட்டில் கொரோனாவிற்கு 36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், பிரேசிலில் 1.15 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 59,696 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும், உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் 31 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் இதுவரை 58,546 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
பிறந்த நாளை குடும்பத்துடன் செல்பி எடுத்து கொண்டாடிய விஜயகாந்த்!