ஹரியானா முதல்வர், சபாநாயகர், 2 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா உறுதி !
இந்தியாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுக்காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், உள்ளிட்ட பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில்,இன்று ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து, தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் அவருக்கு கொரொனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதேபோல் இன்று காலை ஹரியானா மாநில சட்டமன்ற சபாநாயகர் கியன் சந்த் குப்த உள்ளிட்ட 2 எம்.,எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.