1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (20:31 IST)

செப்டம்பர் 1 முதல் மெட்ரோ ரயில்களுக்கு அனுமதி?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இதன் காரணமாக பேருந்து இரயில்களில் விமானம் உள்பட அனைத்து போக்குவரத்துகளும் முடக்கப்பட்டுள்ளது 
 
இருப்பினும் அனலாக் 1, 2, 3 ஆகியவைகளில் ஏகப்பட்ட தளர்வுகளை மத்திய மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடைகள், ஜிம்கள் திறக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பிவிட்டதாகவே கருதப்படுகிறது
 
இந்த நிலையில் நான்காம் கட்ட அன்லாக்கில் போக்குவரத்திற்கும் அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது முதல் கட்டமாக குறைந்த அளவு பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
செப்டம்பர் 1 ஆம் தேதி இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுவதால் மக்கள் பயணம் செய்வதற்கு தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது