வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2023 (22:38 IST)

ஆயர்கள் மாமன்றத்தில் முதன்முறையாக வாக்களிக்கும் பெண்கள்- போப் ஆண்டவர் அனுமதி

pope
வாடிக்கனில் உள்ள ஆயர்கள் மாமன்றத்தில் பெண்கள் வாக்களிக்கும் உரிமை மறுக்கபட்ட நிலையில், முதன்முறையாக பெண்களும் வாக்களிக்கும் வகையில் போப் பிரான்சிஸ்  அனுமதி வழங்கியுள்ளார்.

வாடிக்கன் நகரில் வரும் அக்டோபர் மாதம் உலக ஆயர்கள்  மாமன்ற கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், முக்கிய கருத்துகள் விவாதிக்கப்படவுள்ளது.

அதில், பல பரிந்துரைககள் மிது வாக்கெடுப்புகள் நடத்தி போப் ஆண்டரரிடம் ஒப்படைக்கப்படும். இதையடுத்து போப் ஆண்டவர் அறிகிகையாக வெளியிடுவார்.

இதுதொடர்பாக ஆயர்கள் மன்றத்தில் ஆயர் அல்லாத 70 உறுப்பினர்ககளை நியமிக்க போர் பிரான்ஸிஸ் முடிவெடித்துள்ளார்.  இதில், பலர் பெண்களாக இருப்பர் என்று கூறப்படுகிறது.

இதுவரை இம்மாமன்றத்தில் பெண்கள் வாக்களிக்கும் உரிமை மறுக்கபட்ட நிலையில், முதன்முறையாக பெண்களும் வாக்களிக்கும் வகையில் போப் அனுமதி வழங்கியுள்ளார்.