கைதிகளின் கால்களை கழுவி, முத்தமிட்ட போப் பிரான்சிஸ்
ரோமில், சிறையிலுள்ள 12 இளம் கைதிகளின் கால்களை போன் பிரான்ஸிஸ் தண்ணீரில் கழுவி, அவர்களின் பாதங்களை முத்தமிட்டார்.
போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
போன் பிரான்ஸில் விரைவில் குணமடைய வேண்டுமென பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள், மத குருமார்கள் வாழ்த்துகள் கூறினர்.
இந்த நிலையில், தீவிர சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்த போன் பிரான்சஸ் வீடு திரும்பினார்.
இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை, கிறிஸ்தவர்கள் முக்கிய நிகழ்ச்சயான குருத்தோலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதன்பின்னர், ரோம் நககரில் புற நகரில் உள்ள காசல் டேல் மார்மோசில் இளம் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்குச் சென்ற போப், அந்தச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 12 இளம் கைதிகளின் கால்களை போன் பிரான்ஸிஸ் தண்ணீரில் கழுவி, அவர்களின் பாதங்களை முத்தமிட்டார்.