வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By SInoj
Last Updated : வெள்ளி, 31 மார்ச் 2023 (15:47 IST)

போப் பிரான்சிஸ் குணமடைய பிரார்த்திக்கிறேன்- பிரதமர் மோடி

modi pope
போப் பிரான்சிஸ் குணமடைய வேண்டுமென்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

வாடிகானில் வாழ்ந்து வரும் போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்குச் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதால்,  சுவாச தொற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது உடல் நிலை சீராகி வரும் நிலையில், இன்னும் சில நாட்கள் மருத்துவரின் அறிவுரையின்படி அவர் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் எந்று வாடிகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்தவாரம் நடைபெறும் புனித வெள்ளி வார நிகழ்வுகளில் கலந்துகொள்வது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலையில், போப் பிரான்சிஸ் குணமடைய வேண்டுமென்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘போப் பிரான்சிஸ் விரைவில் உடல் நலம்பெற வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

உக்ரைன் மீதான போர் தொடர்பாக விரைவில் ரஷிய அதிபர் புதினை சந்திக்கவுள்ளதாகவும், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, அவர் இந்தியா வரவுள்ளதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.