தொடர்ச்சியாக 4 வங்கிகளில் திருடிய பெண் : பரபரப்பு சம்பவம்
அமெரிக்காவில் தொடர்ச்சியாக ஒரே வாரத்தில் நான்கு வங்கிகளில் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் போலீஸார் குற்றவாளியை வலைவீசி தேடி வந்த நிலையில் ஒரு கொள்ளைக்காரியை எஃப்பிஐ போலீஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்க்காவில் பென்சில்வேனியா, வடக்கு கரோலினா மாகாணங்களில் கடற்கரையோரம் இருக்கும் வங்கிகளை குறிவைத்து ஒரு மர்ம நபர் ஆயுதங்களுடன் செல்வதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து போலீஸார் விசாரித்தனர்.
அதில், பெண் ஒருவர் பிங் நிறபேக்குடன் சென்று கடந்த ஒரே வாரத்தில் 665 மைல்கள் தூரத்தில் உள்ள வங்கிகல் கொள்ளையடித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள இப்பெண்ணுக்கு பிங் லேடி பண்டிட் என்று பெயரிட்டு அவரது தலைக்கு 6 லட்சத்து 87ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை அறிவித்து தேடிவந்தனர்.
இந்நிலையில்ம் அமெரிகாவில் வடக்கு கரோலினாவில் உள்ள சார்லஸ் என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் அவர் இருப்பதாக தெரியவரவே போலீஸார் அங்கு சென்று பிங்க் லேடி மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.