செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2019 (11:27 IST)

ரயிலுக்குள் கால் தவறி விழுந்த பெண்: தலையில் அடிபட்டு மரணம்

ரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர், மேல் படுக்கையிலிருந்து கால் தவறி கீழே விழுந்ததால் உயிரிழந்தார்.

மும்பையில் இருந்து பெங்களூர் செல்லும் உதயம் எக்ஸ்பிரஸில் சரஸ்வதி என்பவர், ஏசி கோச்சில் பயணம் செய்தார். இவருக்கு அந்த கோச்சில் மேல் படுக்கை ஒதுக்கப்பட்டது. அதில் ஏறி பெங்களூர் வரை பயணம் செய்த அவர், பெங்களூருவை நெறுங்கியதும் கீழே இறங்க முற்பட்டார்.

அப்படி இறங்கிய போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து ரயில்வே துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ரெயில் நிலையத்தில் மருத்துவ குழு தயாரானது.  

பெங்களூர் ரயில் நிலையம் வந்தவுடன் சரஸ்வதிக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சரஸ்வதியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போதே சுயநினைவை இழந்த சரஸ்வதி, அதன் பிறகு சிறுது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மருத்துவர்கள், சரஸ்வதி முதற்கட்ட சிகிச்சையில் சுய நினைவோடு இருந்தார். ஆனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட காரணத்தால் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார் என கூறுகின்றனர். இச்சமபவம் அந்த ரயிலில் பயணித்த பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.