வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 27 ஜூலை 2019 (15:37 IST)

ஆபாச படங்களை கேட்டு மிரட்டல்... தீபாவிற்கு குவியும் ஆதரவு!

கனடாவில் புற்றுநோய் நோயாளி ஒருவருடன் பெண் மருத்துவர் உறவு வைத்துக் கொண்ட வழக்கில் அந்த பெண் மருத்துவர் தனது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளார். 
 
கனடாவில் உள்ள டோரோண்டோ பகுதியில் புற்றுநோய் மருத்துவராக பணியாற்றுபவர் தீபா சுந்தரலிங்கம். நோயாளி ஒருவர் தீபா தன்னிடம் தகாத உறவு வைத்து கொண்டதாக மருத்துவ கவுன்சிலில் புகார் அளித்துள்ளார்.
 
அந்த புகாரில் எனக்கு சிக்கிச்சையளிக்கும் சமயங்களில் பலமுறை இவ்வாறு அவர் செய்துள்ளார். மருத்துவமனையில், நோயாளி படுக்கையில் மற்றும் எனது வீட்டிலும் கூட இது நடந்திருக்கிறது.
 
அவர் எனக்கு மிக சிறந்த வகையில் மருத்துவம் பார்த்தார். என்னை மிகவும் கனிவாக கவனித்து கொண்டார். அதனால் அவர் என்மீது அத்துமீறுவதை என்னால் தடுக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
 
ஆனால், இதற்கு தன் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளார் மருத்துவர் தீபா. அவர் கூறியதாவது, நடந்த சம்பவத்தில் நான் குற்றவாளி இல்லை எனவும், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நோயாளி தான் குற்றவாளி எனவும் கூறியுள்ளார். 
 
என்னை உணர்வு பூர்வமாக கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டு தனது தேவைக்கு பயன்படுத்தி கொண்டதாகவும் பரபரப்பு குற்றசாட்டை தெரிவித்துள்ளார். ஆபாச போட்டோக்களை அனுப்ப சொல்லி மிரட்டி வந்தார். 
 
தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளாவிட்டால் நான் அனுப்பிய எஸ்எம்எஸ் மற்றும் படங்களை மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டியதாக தீபா குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும் அவமானத்தால் கூனி குறுகி நின்றதால் அன்று என்னால் பேச முடியவில்லை, எனவே நீதிமன்றம் எனது தரப்பு நியாயத்தை கேட்க வேண்டும் என தீபா கோரிக்கை விடுத்துள்ளார். இதர்கு ஆதரவாக பல்வேறு மருத்துவர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.