வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2019 (15:48 IST)

கோடிக்கணக்கான கிரெடிட் கார்டு விவரங்களை திருடிய பெண்: சமூக வலைத்தளத்தில் பெருமிதம்

அமெரிக்காவில் கோடிக்கணக்கான பயனாளர்களின் கிரெடிட் கார்டுகள் தொடர்பான விவரங்களை திருடிய ஒரு பெண், அது குறித்து சமூக வலைத்தளங்களில் பெருமையாக பகிர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியரான பெய்ஜ் தாம்சன் என்ற பெண்மணி, தனது ”ஹேக்கிங்” திறனை பயன்படுத்தி, அமெரிக்காவின் கேப்பிடல் ஒன் வங்கியின் வாடிக்கையாளர்கள் 10 கோடி பேரின் கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்களை திருடியுள்ளார். மேலும் இதனை குறித்து சமூக வலைத்தளங்களிலும் பெருமையாக பகிர்ந்துள்ளார்.

பெய்ஜ் தாம்சனின் அந்த பதிவு இணையம் முழுவதும் வைரல் ஆனது. இந்த பதிவை கவனித்த ஒரு இணையதளவாசி, கேப்பிடல் ஒன் வங்கிக்கு இது குறித்த தகவலை தெரிவித்துள்ளார். அதன் பிறகு கிரெடிட் கார்டு விவரங்களை திருடிய தாம்சனை எஃப்.பி.ஐ கைது செய்து, திருடிவைத்த விவரங்களையும் மீட்டுள்ளது.

ஆனால் பெய்ஜ் தாம்சன், கிரெடிட் கார்டு தகவல்களை திருடி, நிதிமோசடியில் ஈடுபடாததால், தகவல் திருட்டுக்காக 5 ஆண்டு சிறையும், 2 லட்சம் டாலர் வரையிலான அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் பாதுகாப்பாக இயங்ககூடிய வங்கிகளில் கேப்பிடல் ஒன் வங்கியும் ஒன்று. அப்படிப்பட்ட வங்கியின் பயனாளர்களில் 10 கோடி பேரின் கிரெடிட் கார்டு தகவல்கள் திருடப்பட்டது வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.