செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 பிப்ரவரி 2021 (10:41 IST)

காதலுக்காக உயிரை கொடுக்கலாம்.. இப்படி எடுக்கலாமா? – ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடிய பெண்!

தென் ஆப்பிரிக்காவில் ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடிய பெண்ணுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலருக்கு காதலர் தினத்திற்கு ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடி அதன் இதயத்தை பரிசாக அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மெரலைஸ் வான் டெர் மெர்வே என்ற பெண் சிறு வயது முதலே வேட்டையில் ஆர்வம் உள்ளவராக இருந்து வரும் நிலையில் முன்னதாக சிங்கம், புலி, யானை உள்ளிட்டவற்றையும் வேட்டையாடி உள்ளார். அவர் வேட்டை லிஸ்ட்டில் ஒட்டகச்சிவிங்கி மட்டும் இடம்பெறாமல் இருந்துள்ளது போல..

இதற்காக காதலர் தின வார இறுதியில் தென் ஆப்பிரிக்க பூங்கா நிர்வாகம் ஒன்றிற்கு 1500 டாலர்கள் கொடுத்து அனுமதி வாங்கி ஆண் ஒட்டகச்சிவிங்கி ஒன்றை வேட்டையாடி உள்ளார். இறந்த ஒட்டகச்சிவிங்கி மேல் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் விலங்குகள் ஆர்வ்லர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் தான் முறைகேடாக எதுவும் செய்யவில்லை என்றும் உரிய அனுமதியோடே வேட்டையாடியதாகவும் மெரலைஸ் கூறியுள்ளார்.