செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (16:10 IST)

ஒரே ஒரு ட்வீட்தான்.. முதல் இடத்தை இழந்த எலான் மஸ்க்! – அப்படி என்ன சொன்னார்?

உலகத்தின் நம்பர் 1 பணக்காரர் என முதலிடம் வகித்த எலான் மஸ்க் ஒரே ஒரு ட்வீட்டால் முதல் இடத்தை இழந்த சம்பவம் வைரலாகியுள்ளது.

டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் என உலகம் முழுவதும் பல்வேறு டநிறுவனங்கள் மூலம் பெரும் பணக்காரராக அறியப்படுபவர் எலான் மஸ்க். இவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பிட்காயின் குறித்து அவர் சொன்ன கருத்தால் சரிவை சந்தித்துள்ளார். உலகம் முழுவதும் பிட்காயின் உள்ளிட்ட பல க்ரிப்டோ கரன்சி புழக்கத்தில் உள்ள நிலையி’ “அசல் பணத்தை விட பிட்காயின்கள் சிறந்தது” என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரது டெஸ்லா நிறுவன பங்கு வீழ்ச்சி கண்டதால் ஒரே நாளில் 1.5 பில்லியன் அமெரிக்க டாலரை இழந்துள்ளார். இதனால் 183.4 பில்லியன் டாலர் மதிப்புடன் எலான் மஸ்க் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், 186.3 பில்லியன் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெப்பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார்.