செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (17:53 IST)

எல்லை பிரச்சினைக்கு பிறகு இந்தியா வரும் சீன அதிபர்! – விரைவில் தேதி அறிவிப்பு!

இந்திய – சீன எல்லை பிரச்சினைக்கு பிறகு முதன்முறையாக சீன அதிபர் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா – சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் எழுந்ததை தொடர்ந்து எல்லையில் போர் பதற்றம் நீடித்து வந்தது. மேலும் இரு நாட்டு படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டதால் மேலும் பதட்டம் எழுந்தது. இந்நிலையில் சமாதான பேச்சுவார்த்தையால் படைகள் திரும்ப பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முன்னதாக சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது உள்ளிட்டவற்றால் இரு நாடுகளுக்கிடையேயான உறவு நிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எல்லை பிரச்சினைக்கு பிறகு முதன்முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வர உள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜின்பிங் இந்தியா வர உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் இந்தியா வந்த ஜின்பிங்கிற்கு மாமல்லபுரத்தில் உபசரிப்பு நடத்தப்பட்டது. தற்போது இரு நாட்டு பிரச்சினைகளால் ஜின்பிங் – மோடி சந்திப்பு எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.