1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Woman decapitated before Kali idol

கனவில் வந்து காளி கூறியதால் தாயாரின் தலையை வெட்டிய இளைஞர்

mother
கொல்கத்தாவில் உள்ள காளி கோவில் மிகவும் புகழ்பெற்றது. இந்தியாவில் இருந்து மட்டுமின்றி வங்கதேசத்தில் இருந்தும் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தார்கள் வருவதுண்டு




 


அந்த வகையில் மேற்குவங்க மாநில எல்லையில் உள்ள வங்கதேசத்தை சேர்ந்த ஒரு பக்தர் தனது தாயாரை காளி கோயிலுக்கு அழைத்து சென்று அங்கு பலி கொடுப்பதற்காக ஆடு-மாடுகளை வெட்டப் பயன்படுத்தும் நீண்ட வாளை எடுத்து தாயாரின் தலையை வெட்டியுள்ளார். பின்னர் ஊருக்குள் வந்து தாயார் தானாகவே வாளை எடுத்து தன் தலையை வெட்டிக்கொண்டதாக நாடகமாடியுள்ளார்

ஆனால் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தனது குடும்பம் நல்ல வளமான நிலைக்கு உயர வேண்டுமென்றால், உன் தாயாரை நீ எனக்கு நரபலி கொடுக்க வேண்டும் என்று தனது கனவில் வந்த காளி தேவி சொன்னதாகவும், காளியின் கட்டளைப்படி புலி தனது தாயாரை நரபலி கொடுத்ததாகவும், போலீசாரிடம் அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். வளமான நிலைக்கு வரவேண்டும் என்று நினைத்த அவர் தற்போது ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
About Writer
sivalingam
அடுத்த கட்டுரையில்
வைகுண்டராஜனுக்கு நெல்லை ஆட்சியர் வைத்தார் குண்டு!