திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2017 (09:22 IST)

வைகுண்டராஜனுக்கு நெல்லை ஆட்சியர் வைத்தார் குண்டு!

வைகுண்டராஜனுக்கு நெல்லை ஆட்சியர் வைத்தார் குண்டு!

வைகுண்டராஜனின் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.


 
 
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகில் வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ்-க்கு சொந்தமான வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. நான்கு மாடிகளை கொண்ட இந்த வணிக வளாகம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
 
இதுகுறித்து சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் வைகுண்டராஜன் தரப்பில் இருந்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கருணாகரன் முன்னிலையில் அனுமதி பெறாமல் விதிகளை மீறியதாக அந்த நான்கு மாடி வணிக வளாகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். வைகுண்டராஜனுக்கு சொந்தமான கட்டிடத்துக்கு சீல் வைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.