செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 20 அக்டோபர் 2023 (14:40 IST)

வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகள் பயன்படுத்தும் வசதி- மார்க் ஜூகர்பெர்க்

உலகில் மக்கள் பரவலாகப் பயன்படுத்தும் சமூக வலைதளங்களுள் ஒன்று வாட்ஸ் ஆப். ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவரிடமும் இந்த வலைதளம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது டெலகிராம் செயலியைப் போன்று இந்த வாட்ஸ் ஆப் செயலிலும் 2 ஜிபிவரை பைல்ஸ் அனுப்பும் வசதி, குரூப் கால், வாய்ஸ் நோட் என பல வசதிகள் உள்ளது. சமீபத்தில், சானல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் மெட்டா நிறுவனத்தில் வாட்ஸ் ஆப் செயலியில் ஒரே நேரத்தில் 2 கணக்குகளை பயன்படுத்தும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட  உள்ளதாக மெட்டா நிறுவன தலைமைச் செயலதிகாரி மார்ஜ் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.