வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 2 ஜூலை 2023 (14:35 IST)

ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா கொண்டு வரும் சமூக வலைத்தளம்.. எலான் மஸ்க் அதிர்ச்சி..!

ட்விட்டர் என்ற சமூக வலைதளம் உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக உள்ளது என்பதும் குறிப்பாக எலான் மஸ்க் இந்த தளத்தை வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் புதிய சமூக வலைதளத்தை களம் இறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் இதற்கான செயலை வெளியாகும் என்றும் இந்த செயலியின் பெயர் Threads என்றும் கூறப்படுகிறது. 
 
அதேபோல் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் போல் இன்ஸ்டாகிராமிலும்  எழுத்துக்களை போஸ்ட்டாக பதிவு செய்யும் வசதி கொண்டுவரப்பட உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
மெட்டா நிறுவனத்தின் புதிய சமூக வலைதளம் காரணமாக 44 பில்லியன் கொடுத்து ட்விட்டரை வாங்கி உள்ள எலான் மஸ்க்  அதிர்ச்சி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva