புதன், 17 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 5 ஜனவரி 2019 (19:15 IST)

ஆப்பிள் போனில் ’நியூஇயர் ’ வாழ்த்து சொன்னதுக்கு என்ன நடத்துச்சுன்னு தெரியுமா..?

ஆப்பிள் போனில் ’நியூஇயர் ’  வாழ்த்து சொன்னதுக்கு என்ன நடத்துச்சுன்னு தெரியுமா..?
சீன தேசத்தில் சேர்ந்த, ஸ்மார்ட் போன் விற்பனையில்  கொடி கட்டிப் பறக்கும்  ஹூவெய் நிறுவனத்துக்கும், அமெரிக்க நிறுவனத்துக்கும் தொழில்முறை போட்டி உள்ளது. உலக அளவில் ஸ்மார்ட் போன் விற்பனையில் இரண்டாம் இடத்தில் இருந்த ஆப்பிள் போனை பின்னுக்கு தள்ளி ஹுவெய் நிறுவனம் அந்த இடத்தை தக்க வைத்தது.
இப்படிருக்க, கடந்த நியூஇயர் தினத்தன்று ஹூவெய் நிறுவனத்தின் அதிகார பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து நியூஇயர் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதில் என்ன சிக்கல் என்னவென்றால் அந்த வாழ்த்து செய்து ஐபோனில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. அந்த வாழ்த்திலும் அது பகிரங்கமாக தெரிகிறது.
ஆப்பிள் போனில் ’நியூஇயர் ’  வாழ்த்து சொன்னதுக்கு என்ன நடத்துச்சுன்னு தெரியுமா..?
இதைப் பார்த்து கடுப்பான  ஹூவாய் ஊழியர்கள் அந்த பக்கத்தை அழித்து விட்டதாகவும், விபிஎன் (virtual private net work)முறை வலைதளம் மூலமாக வேறு ஒரு நிறுவனத்துடன் இணைந்தே சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுவதால் தான் இப்பிரச்சனை நிகழ்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
ஆப்பிள் போனில் ’நியூஇயர் ’  வாழ்த்து சொன்னதுக்கு என்ன நடத்துச்சுன்னு தெரியுமா..?
மேலும், இந்த வாழ்த்து செய்தியை அனுப்பிய ஊழியர்கள் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகின்றன.