1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 டிசம்பர் 2018 (17:00 IST)

நிர்வாண போட்டோ வைரல் விவகாரம்: ராதிகா ஆப்தே யாரை பாராட்டினார் தெரியுமா...?

ஹிந்தி திரைப்படத்தில் மிகவும் புகழ்பெற்ற நடிகை ராதிகா ஆப்தே. இவர் ரஜினிக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இவர் நடித்த நிர்வாண குறும்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் இப்படம் வெளியானபோது ரதிகா ஆப்தே எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது அவர் நிர்வாண புகைப்படங்கள் தொடர்பாக பேசியிருக்கிறார்.
 
அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
’இந்த நிர்வாண புகைப்படம் விவகாரம் வெளியான போது கோபப்படவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது அமைதியாக இருக்கும்படி பி.ஆர்.ஓ பிரபாத் எனக்கு அறிவுறை வழங்கினார். அதன்படிதான் நான் செயல்பட்டேன். அந்த சமயத்தில்தான் நான் அமைதியை கற்றுக்கொண்டேன் .
 
பிரபாத் ( பி.ஆர்.ஓ) மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் . பிரச்சனை வலுத்துக் கொண்டிருந்த சமயத்தில் எப்படி அமைதியாக இருக்க வேண்டும் என்பதை நான் அவரிடம்தான் கற்றுக்கொண்டேன், அவரை போன்று யாரும் இருக்க மாட்டார்கள்.’ இவ்வாறு  ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.