வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (14:34 IST)

தாலிபான்கள் மீதான தடையை விலக்க முடியாது: ஃபேஸ்புக் திட்டவட்டம்!

தாலிபான்கள் மற்றும் தாலிபான்களுக்கு ஆதரவானவர்களின் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் தாலிபான்கள் மீதான தடையை அமெரிக்கா விலக்கினாலும் நாங்கள் விலக்க மாட்டோம் என பேஸ்புக் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் சமீபத்தில் ஆக்கிரமித்துள்ள நிலையில் பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் தாலிபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்கள் பேஸ்புக் கணக்குகளை முடக்கியது 
 
இந்த நிலையில் தாலிபான்கள் தீவிரவாத குழு என்று தாங்கள் கருதுவதாகவும் அவர்கள் தொடர்பான எந்த உள்ளடக்கங்களையும் பேஸ்புக்கின் அனைத்து பக்கங்களையும் வெளியிடுவது தடை செய்வதாகவும் பேஸ்புக் உள்ளடக்க பிரிவு துணைத் தலைவர் தெரிவித்துள்ளார் 
 
அமெரிக்க அரசே ஒருவேளை தாலிபான்கள் மீதான தடையை விலக்கினாலும், நாங்கள் விலக்க மாட்டோம் என பேஸ்புக் திட்டவட்டமாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா இதுவரை தாலிபான்களை வெளிநாட்டு தீவிரவாதிகள் அமைப்பு என அறிவிக்கவில்லை என குறிப்பிடத்தக்கது