திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (07:17 IST)

காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு: 40 பேர் பலி என தாலிபான்கள் அறிவிப்பு!

காபூல் விமான நிலையத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு மற்றும் நெரிசல் காரணமாக 40 பேர் பலியாகியுள்ளதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
 
ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தாலிபான்கள் வசம் சென்று உள்ளதை அடுத்து அந்நாட்டில் இருந்து வெளியேற ஏராளமான ஒரு முடிவு செய்து காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர். இதனால் விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் துப்பாக்கி சூடு ஆகியவை காரணமாக 40 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் காபூலில் இருந்து யாரும் நாட்டைவிட்டு யாரும் வெளியேற வேண்டாம் என்றும் விமானநிலையத்திற்கு யாரும் வரவேண்டாம் என்றும் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இருப்பினும் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.