1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (20:56 IST)

ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பிய ஃபேஸ்புக் நிறுவனம்

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கத்தின் மீது ஏற்கனவே டுவிட்டர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது என்பதை பார்ப்போம். இந்த நிலையில் டுவிட்டரை அடுத்து ராகுல்காந்திக்கு ஃபேஸ்புக் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
டெல்லியில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த புகைப்படத்தை ராகுல்காந்தி தனது டுவிட்டரில் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்திருப்பதாக தெரிகிறது 
 
இதனை அடுத்து ராகுல் காந்தியிடம் விளக்கம் கேட்டு பேஸ்புக் நிறுவனம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது. ராகுல்காந்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை உடனடியாக நீக்க கோரி ஏற்கனவே தேசிய குழந்தைகள் ஆணையம் பேஸ்புக் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து பேஸ்புக் நிறுவனமும் ராகுல்காந்திக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது