அமெரிக்க ராணுவ வீரர்கள் தகவல் அடங்கிய சாதனத்தை தாலிபான்கள் பிடியில்?
அமெரிக்க ராணுவ வீரர்கள் பற்றிய தகவல் அடங்கிய சாதனத்தை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாலிபான் படைகள் புகுந்து அந்நாட்டின் தலைநகரை பிடித்து விட்டது என்பதும் தற்போது ஆப்கானிஸ்தான் நாடு முழுவதுமே தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்நிலையில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பற்றிய தகவல் அடங்கிய சாதனத்தை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தாலிபான்களுக்கு எதிரான அமெரிக்க போரில் முக்கிய பங்காற்றிய ஆப்கானியர் பற்றிய தகவல்களும் சிக்கியுள்ளன.
HIIDE எனப்படும் சாதனத்தில் அமெரிக்க வீரர்கள், உதவிய ஆப்கானியர்கள் பற்றிய அடையாளங்கள் பதியப்பட்டுள்ளன. அமெரிக்க ராணுவத்துக்கு உதவிய நபர்களை ஹைட் சாதனம் மூலம் கண்டறிந்து தாலிபான்கள் பழிவாங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
போரில் கைப்பற்றியுள்ள அமெரிக்க ராணுவத்தின் நவீன ஆயுதங்களையும் தாலிபான்கள் பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்கான் ராணுவத்துக்கு அமெரிக்கா தந்த ஆயுதங்களில் பெரும்பாலானவை தாலிபான்கள் வசம் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.