48 வருஷமா தண்ணியே குடிக்காத வாரன் பஃபெட் - அதிர்ச்சி செய்தி
உலக பணக்காரர் பட்டியலில் இருப்பவர் வாரன் பஃபெட். இவர் உலகப்புகழ்பெற்ற முதலீட்டாளரும் ஆவார். பணத்தை கையாளுவது, சேமிப்பது தொடர்பாக பல முக்கிய அறிவுரைகளை இவர் உலகிற்கு வழங்கியிருக்கிறார்.
இந்நிலையில்தான், கடந்த 48 வருடங்களாக வாரன் பஃபெட் தண்ணீரே குடிப்பதில்லை என்கிற தகவல் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. வாரன் பஃபெட்டுக்கு இப்போது 96 வயது ஆகிறது. அவர் கந்த 48 வருடங்களாக தண்ணீருக்கு பதில் செர்ரி கோக் மட்டுமே குடித்து வருகிறாராம். பில்லியனர் முதலீட்டாளர் பில் அக்மேன் ஒரு Podcast நிகழ்ச்சியில் இந்த தகவலை கூறியுள்ளார்.
பல வருடங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு விருந்தினராக வாரன் பஃபெட் வந்தபோது தண்ணீர் வேண்டுமா என கேட்டபோது 48 வருடங்களாக நான் தண்ணீர் குடிக்கவில்லை என வாரன் பஃபெட் சொன்னதாக அவர் கூறியிருக்கிறார். பல வருடங்களாக பெப்சி குடித்து வந்த வாரன் பஃபெட் 1986ம் வருடம் முதல் செர்ரி கோக் குடித்து வருகிறாராம்.