1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. joseph vijay going to mettur to open the water

வேஷ்டி, சட்டையில் மேட்டூர் செல்லும் முதல்வர் விஜய்!.. தண்ணீர் திறந்து வைப்பு...

vijay
மேட்டூர் அணையில் நீரை திறந்து வைப்பதற்காக முதல்வர் ஜோசப் விஜய் தற்போது மேட்டூர் சென்று கொண்டிருக்கிறார். இன்று காலை விமான மூலம் சேலம் வந்த அவர் அங்கிருந்து கார் வழியாக மேட்டூர் சென்று கொண்டிருக்கிறார். காலை 11 மணியளவில் அவர் மேட்டூர் சென்று அங்கு பாசனத்திற்காக நீரை திறந்து வைக்கவுள்ளார்.

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று நீர் திறக்கப்படுகிறது. இன்று முதல் தொடர்ந்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.. முதல் நாளாக முதல்வர் விஜய் அங்கு சென்று நீரை திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து பட்டு, வேஷ்டி சட்டையில் இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் விஜய் சேலத்திற்கு சென்றார்..

அங்கிருந்து தற்போது காரில் அவர் மேட்டூர் சென்று கொண்டிருக்கிறார்.. விமான நிலையத்தில் அவருக்கு அதிகாரிகள் பலரும் வரவேற்பு அளித்தனர். அதன்பின் காரில் அவர் மேட்டூர் கிளம்பி சென்றார். வழியில் இருபுறமும் அவரின் ரசிகர்களும், தவெக தொண்டர்களும், பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள்.

வழக்கமாக காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு வருடமும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்.. ஆனால் அப்போது மேட்டூரில் அந்த தேதியில் தண்ணீர் வரத்து இல்லாததால் தாமதமாக இன்று திறக்கப்படுகிறது..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஆரக்கிள் நிறுவனத்தில் இருந்து 3000 பேர் இன்று வேலை இழப்பா? இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பு?