1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. volcano erupts ashes in Dongo airport

எரிமலை வெடிப்பு: சாம்பலை நீக்க மீட்பு குழுக்கள் தீவிர முயற்சி!

எரிமலை வெடிப்பு
டோங்கா தீவின் விமானநிலையத்தில் படிந்துள்ள எரிமலைச் சாம்பலை நீக்க மீட்பு குழுக்கள் தீவிரமாக முயற்சி. 

 
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான டோங்காவை சுற்றி பல குட்டி தீவுகள் உள்ளன. இந்நிலையில் குட்டி தீவுகளில் ஒன்றான ஹூங்கா டோங்காவில் கடந்த 15 ஆம் தேதி திடீரென எரிமலை வெடித்தது. இதனால் ஏற்பட்ட 15 மீட்டர் உயர சுனாமி அலைகள் சுற்றி இருந்த தீவுகளை தாக்கியது.
 
இதனால் மாங்கோ தீவு, ப்னோய்புவா தீவு, நமுகா தீவு உள்ளிட்ட பல தீவுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. 50 பேரை மட்டுமே மக்கள் தொகையாக கொண்ட மாங்கோ தீவு முற்றிலும் தரமட்டமாகி கடல் நீரில் மூழ்கியுள்ளது. 
 
இந்நிலையில் டோங்கா தீவின் விமானநிலையத்தில் படிந்துள்ள எரிமலைச் சாம்பலை நீக்க மீட்புதவிக் குழுக்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. டோங்கா தீவின் விமானநிலையத்தில் படிந்துள்ள எரிமலைச் சாம்பலை நீக்க மீட்புதவிக் குழுக்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. 
 
எரிமலை வெடிப்பால் உண்டான புகை 20 கிலோ மீட்டர் உயரத்துக்கு எழும்பியது என்று டோங்கா அரசு தெரிவிக்கிறது. 
About Writer
Sugapriya Prakash