இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள 232 வங்கிகளின் மொபைல் ஆப் களில் வைரஸ் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இமெயில்கள் மூலம் ரான்ஸம்வேர் எனும் வைரஸ் கம்ப்யூட்டரில் பரவி அதனிலுள்ள தகவல்களை திருட முயன்றது. இதனையடுத்து அதே போல் தற்பொழுது வங்கி மொபைல் ஆப்களில் வைரஸ் தாக்கியுள்ளதாக, ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்கள் வழங்கும் கம்பெனிகளில் ஒன்றான குயிக் ஹீல் செக்யூரிட்டி லேப்(Quick heal security Lab) நிறுவனம் தெரிவித்துள்ளது. ...