1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2018 (15:35 IST)

தென்னாப்பிரிக்காவை திணறவிடும் இந்தியா: சுழற்றி வீசும் புவனேஷ்வர் குமார்!

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் முதலில் பந்துவீசும் இந்திய அணி சிறப்பாக பந்துவீசி வருகிறது. புவனேஸ்வர் குமார் அசத்தலாக பந்துவீசி வருகிறார்.
 
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி அங்கு மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி இன்று கேப்டவுன், நியூலேண்ட் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
 
தொடக்க வீரர்களாக களமிறங்கிய டீன் எல்கர் ரன் எதுவும் எடுக்காமல் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் சஹாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான மார்க்ரன் புவனேஸ்வர் பந்துவீச்சில் எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஹாசிம் ஆம்லா புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் சஹாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
 
அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி இந்திய அணியின் பந்துவீச்சில் திணறியது. 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா அணியை டிவில்லியர்ஸ் சற்று சரிவில் இருந்து மீட்டு வருகிறார். அவருடன் டூபிளசிஸ் துணையாக இருந்து விளையாடி வருகிறார். தற்போது அந்த அணி 71 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.