திருமணத்திற்கு பின் விராத் கோஹ்லியின் ரன் எவ்வளவு தெரியுமா?
திருமணத்திற்கு முன் சதங்களாக விளாசி வந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி, திருமணத்திற்கு பிந்தைய முதல் போட்டியில் வெறும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்
ஆம், இன்று கேப்டவுன் நகரில் நடைபெற்ற இந்திய-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டிவில்லியர்ஸ் மற்றும் டூபிளஸ்சிஸ் அரைசதம் அடித்தனர். இந்திய அணியின் புவனேஷ்குமார் 4 விக்கெட்டுக்களயும் அஸ்வின் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இந்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி 11 ஓவர்களில் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்தது. விராத் கோஹ்லி 5 ரன்களும், தவான் 16 ரன்களும், முரளி விஜய் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி தற்போது முதல் இன்னிங்ஸில் 285 ரன்கள் பின்தங்கியுள்ளது.