1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 6 ஜனவரி 2018 (14:18 IST)

ஆதார் - மொபைல் எண் இணைக்க புது வழி...

மொபைல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது சிம் கார்டுடன் ஆதாரை இணைக்க பிப்ரவரி 6 ஆம் தேதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் ஆஃப்லைன் ஸ்டோர்களில் காத்திருந்து கைவிரல் ரேகையை வைத்து மொபைல் நம்பருடன் ஆதாரை இணைத்து வருகின்றனர். 
 
இந்நிலையில், அனைத்து நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் தங்களது நெட்வொர்க் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு சிம் கார்டு நம்பருடன் ஆதாரை இணைத்து கொள்ளலாம். இதற்காக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இலவச எண் 15456 தொடர்பு கொண்டு IVR வழிமுறைகளை பின்பற்றி, ஆதாருடன் மொபைல் நம்பரை இணைத்து கொள்ளலாம். 
 
ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சேவையை துவங்கிவிட்டன. ஜியோ ஆதார் எண் கொண்டே சிம் கார்டுகளை ஆக்டிவேட் செய்து வருவதால் ஜியோ வாடிக்கையாளர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய கட்டாயமில்லை. 
 
ஏர்டெல் மற்றும் வோடபோன் வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் நம்பருடன் ஆதாரை எந்த வட்டாரத்தில் வாங்கியிருந்தாலும் இணைக்க முடியும். ஆனால், ஐடியா மொபைல் நம்பர் பெறப்பட்ட வட்டாரத்திலேயே ஆதார் நம்பரை இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.