திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 நவம்பர் 2019 (08:52 IST)

இந்தியர்கள் அமெரிக்கா செல்ல விசா மறுப்பு! – ஆய்வறிக்கை தகவல்

இந்தியர்கள் பணி நிமித்தம் அமெரிக்கா செல்ல வழங்கப்படும் ‘எச்1பி’ விசா வழங்குவதில் பல்வேறு கடுமையான முறைகளை பின்பற்றி இந்தியர்களின் விசா நிராகரிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

நிரந்தர குடியுரிமை இல்லாமல் வேலை பார்ப்பதற்காக அமெரிக்கா செல்பவர்களுக்கு ‘எச்1பி’ விசா வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகள் மட்டுமே செல்லுப்படியாகும் இந்த விசாவில் தொடர்ந்து அமெரிக்காவில் வசிக்க வேண்டுமானால், தொடர்ந்து அமெரிக்க நிறுவனங்களில் பணியில் இருந்தால் மட்டுமே முடியும்.

ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு விசா வழங்குவதில் கடுமையான சட்டங்களை அமல்படுத்தியுள்ளார். அமெரிக்க ஐடி நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் பல இந்தியர்கள் இந்த ‘எச்1பி’ விசாவையே நம்பி இருக்கின்றனர். இந்நிலையில் புதிதாக ‘எச்1பி’ விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவிலிருந்து அமெரிக்க நிறுவனங்களுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதாக சமீபத்திய தனியார் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்கா செல்ல எச்1பி விசா விண்ணப்பிப்பவர்கள் அதிகம் இந்தியா, சீனாவை சேர்ந்தவர்கள் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.