இந்தியாவுக்கு வரப்போகிறது பெரிய ஆபத்து!!
கடல் மட்டம் உயர்வதால் இந்தியாவிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என ஐ.நா.பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.
பாங்காக்கில் ஆசிய நாடுகள் உச்சி மாநாடு நடந்துவரும் நிலையில் அதில் பங்கேற்று பேசிய ஐ.நா.வின் பொது செயலாளர் ஆண்டோனியோ குட்டேரஸ், ”வெப்ப நிலை காரணமாக பனி உருகுவதால், கடல் மட்டம் வேகமாக அதிகாரித்து வருகிறது, பருவ நிலை மாற்றத்தாலும் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது” என தெரிவித்தார்.
மேலும் 2050 க்குள் 30 கோடி மக்கள் கடல் நீரால் அழியக்கூடிய அபாயம் உள்ளதாகவும், குறிப்பாக இந்தியா, சீனா, வங்கதேசம் போன்ற ஆசிய நாடுகளில் 10 சதவீதம் மக்கள் நீருக்குள் மூழ்கிவிடுவார்கள் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
முன்னதாக கிரீன்லாந்தில் பனி பாறைகள் டன் கணக்காக உருகி வரும் நிலையில், தற்போது கடல் மட்ட உயர்வால் உலக மக்களுக்கு பெரும் ஆபத்து நேரவுள்ளது என வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.