திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2019 (17:32 IST)

சிக்கன் சான்ட்விச்சுக்காக கத்திக் குத்து! – அமெரிக்காவில் விபரீதம்!

அமெரிக்காவில் பிரபல கடையில் சிக்கன் சாண்ட்விச்சுக்காக போட்ட சண்டையில் கத்தியால் குத்திய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அமெரிக்காவின் வாஷிங்கடன் மாகாணத்தில் உள்ளது பிரபல பாப்பாய்’ஸ் ரெஸ்டாரண்ட். இந்த கடையில் விற்பனையாகும் சிக்கன் சாண்ட்விட்ச் அந்த பகுதியில் மிகவும் பிரபலம்.

நேற்று லிவிங்க்ஸ்டன் சாலையில் உள்ள பாப்பாய்’ஸ் ரெஸ்டாரண்டில் உணவுகள் வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர். 28 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரும் சிக்கன் சாண்ட்விட்ச் வாங்க வரிசையில் நின்றிருக்கிறார். அப்போது வேறொரு நபர் வரிசையை தாண்டி உள்ளே நுழைய முயற்சிக்க, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆகியுள்ளது. அப்போது சாண்ட்விட்ச் வாங்க வந்தவர் தான் வைத்திருந்த கத்தியால் எதிராளியை சராமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்த நபர் அங்கேயே சரிந்து விழுந்துள்ளார். குத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயம்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

ஒரு சிக்கன் சாண்ட்விட்சுக்காக நடந்த இந்த கொலை சம்பவமானது வாஷிங்டன் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.