திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 6 நவம்பர் 2019 (10:38 IST)

101 ஆண்டுகளுக்கு பிறகு நீருக்குள் இருந்து வெளிவந்த படகு..

நயாகரா ஆற்றில் 101 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய படகு ஒன்று தற்போது வெளிவந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

கடந்த 1918 ஆம் ஆண்டு கனடாவின் நயாகரா ஆற்றில் இரண்டு பேர் செலுத்திகொண்டு போன இழுவை படகு பாறைகளுக்கு இடையே சிக்கியது. அந்த படகையும் அதில் இருந்த இருவரையும் மீட்க கடும் முயற்சி மேற்கொண்டனர் மீட்பு குழுவினர். ஆனால் அவர்களால் அந்த இருவரையும் மீட்க முடிந்த நிலையில் படகை மீட்க முடியவில்லை. ”ஐயர்ன் ஸ்கவ்” என்று அழைக்கப்படும் அந்த படகு, அந்த ஆற்றின் 150 அடிக்கு கீழே மூழ்கியது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை, நயாகரா ஆற்றில் பெரும் சூறாவளி காற்று ஏற்பட்ட நிலையில் தற்போது அந்த படகு நீரோட்டத்தில் அடித்து நீருக்கு வெளியே வந்துள்ளது. 101 ஆண்டுகள் நயாகரா ஆற்றின் நீரோட்டத்திற்கு வெளியே வராது படகு தற்போது வெளிவந்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

இது குறித்து நயாகரா பார்க்ஸ் கமிஷன் அதிகாரி ஜிம் ஹில், ”காற்றின் வேகம் அதிகமாக இருக்கிறது. ஆதலால் அந்த படகு நீரால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறது, மேலும் அந்த படகு நீரால் இழுத்துச் செல்லப்பட்டு அருவியிலிருந்து கீழே தள்ளப்படும்” என கூறியுள்ளார்.