அமெரிக்க ஓட்டல் மெனுவில் தீபிகா படுகோனே தோசை: புத்தாண்டில் அறிமுகம்

Last Modified வியாழன், 3 ஜனவரி 2019 (09:06 IST)
பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே பெயரில் அமெரிக்காவில் உள்ள ஓட்டல் ஒன்றில் தோசை மெனு ஒன்று புதியதாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தாண்டு முதல் இணைக்கப்பட்டுள்ள இந்த தீபிகா தோசையை பலர் விரும்பி சாப்பிட்டதாக அந்த ஓட்டலின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் பிரபலங்களின் பெயர்களில் ஒரு மெனு சேர்ப்பதை தங்கள் ஓட்டல் நிர்வாகம் வழக்கமாக கொண்டுள்ளது என்றும், அந்த வகையில் பாலிவுட்டில் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் நடித்து உலகம் முழுவதும் கடந்த ஆண்டு புகழ்பெற்ற தீபிகாவின் பெயரில் தோசை ஒன்றை தங்கள் மெனுவில் இணைத்துள்ளதாகவும், இந்த தோசையை புத்தாண்டு தினத்தில் பலர் ருசித்து சாப்பிட்டதாகவும் இந்த தோசையின் விலை 10 டாலர்கள் என்றும் ஓட்டல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


கடந்த ஆண்டு நடந்த முக்கிய நிகழ்வுகளில் தீபிகா படுகோனே திருமணமும் ஒன்று என்பதும், கடந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நட்சத்திரங்களின் பட்டியலில் தீபிகாவின் பெயர் இரண்டாவது இடத்தில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :