கடலை, காதல், கல்யாணம்: இது தீபிகா - ரன்வீர் லவ் ஸ்டோரி

Last Updated: புதன், 19 டிசம்பர் 2018 (19:49 IST)
சமீபத்தில் பாலிவுட்டின் இரு முன்னணி நடிகைகளான தீபிகா மற்றும் பிரியங்காவிற்கு அவர்களது காதலர்களுடன் திருமணம் ஆனது. ஆனால், தீபிகா - ரன்வீர் பற்றிய செய்திகள்தான் இப்போது ஹாட்டாக உள்ளது. 
 
இந்நிலையில், தீபிகா சமீபத்தில் தங்களது காதல் கதையை பற்றி மனம் திறந்துள்ளார். அதில் அவர் கூறியது பின்வருமாறு, நான் யஷ்ராஜ் நிறுவனத்தில் வைத்து தான் ரன்வீர் சிங்கை முதன்முதலாக பார்த்தேன். 
 
அப்பொழுது அவர் வேறு ஒரு பெண்ணை காதலித்தார். இருப்பினும் அவர் என்னுடன் கடலை போட்டார். நீங்கள் என்னுடன் கடலை போடுகிறீர்கள் என்று நான் ரன்வீர் சிங்கிடம் தெரிவித்து இருக்கிறேன். 
 
பின்னர் அது காதலாக மாரியது. 6 ஆண்டுகளுக்கு முன்பு நான் ரன்வீரை காதலிக்க துவங்கியபோது நாங்கள் லஞ்ச் அல்லது டின்னர் சாப்பிட அடிக்கடி வெளியே செல்வோம். கால போக்கில் எங்களது காதல் உறுதியாகி தற்போது திருமணமும் முடிந்துவிட்டது. மேலும், எனது கணவர்தான் தன்னுடைய சிறந்த நண்பர் என்றும் தீபிகா தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :