1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 22 ஜூலை 2021 (10:11 IST)

இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்!

இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்!
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கென் என்பவர் இந்தியா வர இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரான ஆண்டனி பிளிங்கென் என்பவர் ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
டெல்லியில் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க ஆண்டனி பிளிங்கென் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஏற்கனவே இந்தியா வந்த நிலையில் டெல்லிக்கு வரும் இரண்டாவது அமெரிக்க அமைச்சர் பிளிங்கென் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்களின் வரவேற்க இந்தியா தற்போது தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது