செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 21 ஜூலை 2021 (11:13 IST)

தீபக் சஹாரின் பேட்டிங்கை இங்கிலாந்தில் கண்டுகளித்த இந்திய வீரர்கள்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்திய அணி தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் 69 ரன்கள் எடுத்து, 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்திய தீபக் சஹார் வெற்றிக்கு வித்திட்டார் என்பதும் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த போது பொறுப்புடன் விளையாடி தீபக் சஹார் கடைசி வரை அவ்ட் ஆகாமல் 69 ரன்களை சேர்த்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவரின் இந்த சிறப்பான பேட்டிங்கை இங்கிலாந்தில் இருக்கும் இந்திய வீரர்கள் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்துள்ளனர். அந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.