செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 ஜூலை 2021 (13:24 IST)

பப்ஜியை தொடர்ந்து இந்தியாவில் நுழையும் டிக்டாக்!? - மறுஅறிமுகம் செய்ய திட்டம்!

இந்தியாவில் பிரபலமான டிக்டாக் தளம் தடை செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் டிக்டாக் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் கடந்த ஆண்டில் டிக்டாக், ஹலோ, பப்ஜி உள்ளிட்ட பல செயலிகள் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் நீண்ட காலம் கழித்து பப்ஜி செயலி இந்தியாவுக்கென பிரத்யேகமான மொபைல் செயலியை தயாரித்து மறு அறிமுகப்படுத்தியது.

அந்த வகையில் டிக்டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பைட்டேன்ஸ் மீண்டும் இந்தியாவில் டிக்டாக்கை அறிமுகப்படுத்தும் முயற்சியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக டிக்டாக் எழுத்துரு, டிசைன்களை மாற்றி புதிதாக அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.