இந்தியாவின் கொரோனா பாதிப்பு, உலகிற்கு எச்சரிக்கை மணி! – யுனிசெப் அமைப்பு கருத்து!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இது உலகிற்கான எச்சரிக்கை மணி என யுனிசெப் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 4 லட்சத்தை தொட்டுள்ளன. உலக அளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கு உதவ பல்வேறு நாடுகளும், யுனிசெப் உள்ளிட்ட அமைப்புகளும் முன்வந்துள்ளன.
இந்நிலையில் இந்திய நிலைமை குறித்து பேசியுள்ள யுனிசெப் அமைப்பின் செயல் இயக்குனர் ஹெரிட்டா போர் “இந்தியாவின் சோகமான நிலைமை நம் அனைவருக்கும் எச்சரிக்கை மணியை எழுப்ப வேண்டும். இப்போது உலகம் முன்வந்து இந்தியாவிற்கு உதவாவிட்டால் வைரஸ் தொடர்பான இறப்புகள் பிராந்தியத்திலும், உலகம் முழுவதும் எதிரொலிக்கும்” என கூறியுள்ளார்.