1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 7 மே 2021 (08:32 IST)

பிக்பாஸ் கேப்ரில்லாவுக்கு கொரோனா: இன்ஸ்டாகிராமில் தகவல்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான கேப்ரில்லாவுக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்
 
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு இடையிலேயே வெளியேறியவர் கேப்ரில்லா என்பது தெரிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் தற்போது அவர் பிக் பாஸ் ஜோடி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்தார் 
 
இந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து இந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் விலகி உள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் அனைவரும் கவனமாக வீட்டை விட்டு வெளியே போகாமல் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அர்ச்சனா, ரம்யா பாண்டியன், ஆஜித் உள்பட பலர் விரைவில் கொரோனா தொற்றிலிருந்து கேப்ரில்லா குணமாக வேண்டுமென வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்