தொடர்புடைய செய்திகள்
- உக்ரைனில் போரிடும் ரஷ்ய வீரர்களுக்கு உணவு கொடுத்து உதவும் சீனா!
- யுக்ரேன் Vs ரஷ்யா: டொனியட்ஸ்க் ஏவுகணை தாக்குதலில் 20 பேர் பலி: ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்
- 'யுக்ரேனில் சண்டையிட சீனாவிடம் ஆயுதங்களைக் கோரும் ரஷ்யா'!
- உக்ரைனில் போர் நிறுத்தப்படுமா? – இன்று இரு நாடுகள் மீண்டும் பேச்சுவார்த்தை!
- போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய உக்ரைன் பெண் மருத்துவர் பலி!
நேட்டோ நாடுகளை ரஷ்ய ஏவுகணைகள் தாக்கும்! – உக்ரைன் அதிபர் எச்சரிக்கை!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து வரும் நிலையில் நேட்டோ நாடுகளையும் ரஷ்யா தாக்கும் என உக்ரைன் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனின் பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இரு தரப்பிலும் அதிகமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. மக்கள் பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் தேடி சென்று வருகின்றனர். இந்த போரில் நேட்டோ அமைப்பு வான்வெளி எல்லையை மூட வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து கூறி வருகிறார்.
சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசியுள்ள அவர் “சரியான தடுப்பு நடவடிக்கை இல்லை என்றால் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடங்கும் என கடந்த ஆண்டே நேட்டோ நாடுகளுக்கு நான் எச்சரிக்கை விடுத்தேன். நான் மீண்டும் சொல்கிறேன். நீங்கள் எங்கள் வானத்தை மூடவில்லை என்றால் உங்கள் பிரதேசத்தில் ரஷ்யாவின் ஏவுகணைகள் விழுவதற்கு சிறிது நேரமே ஆகும்” என தெரிவித்துள்ளார்.
