செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய உக்ரைன் பெண் மருத்துவர் பலி!

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய உக்ரைன் பெண் மருத்துவர் பலி!
உக்ரைன் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்ய வேண்டும் என்ற பணியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
உக்ரைன் நாட்டில் போர் நடந்து வரும் நிலையில் அந்நாட்டில் இருந்து பலர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் உக்ரைனை சேர்ந்த பெண் மருத்துவர் வலேரியா என்பவர் உக்ரைனில் இருந்து வெளியே வாய்ப்பு இருந்தும் உக்ரைன் நாட்டில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்ய வேண்டும் என்பதற்காக அவர் அங்கேயே இருந்தார்
 
இந்த நிலையில் மருத்துவர் வலேரியா மருந்து வாங்குவதற்காக காரில் சென்று கொண்டிருந்தபோது ரஷ்ய துருப்புகளின் பீரங்கி தாக்குதலில் பலியானார். இந்த தாக்குதலில் அவரது தாயார் மற்றும் ஓட்டுனர் என மூன்று பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது